மானுடம் செழிக்க கலையும் வளமும் பெருகட்டும்!

ஊடகவியலாளர் அரவிந்த்குமாரின் துபை பயண அனுபவம்:

கலை, இலக்கியம் போன்றவை தழைத்தோங்க அடிப்படையில் வளமான சமூகம் அமைய வேண்டும். போர்கள் அற்ற, அமைதியான, செல்வம் மிகுந்த சமூகத்தில் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாவதால் இசை, நாட்டியம், ஓவியம், சிற்பம், நாடகம், கதை, கவிதை போன்ற நுண்கலைகள் பிறப்பெடுக்கின்றன.

தமிழ்நாட்டில் சோழர் காலந்தொட்டு நிலையான அரசும், வளமான காலமும் நிலவியது. அதனால் தான் சோழர்கள் காலத்தில் குறிப்பாக காவிரிக் கரையில் மேலதிகமாக சொல்வது என்றால் தஞ்சையில் நுண்கலைகள் ஆறாக பெருக்கெடுத்தது. அது ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றளவும் நீடிக்கிறது.

இக்காலக்கட்டத்தில் அதற்கு இணையாக சொல்வது என்றால் துபை நகரத்தைச் சொல்லலலாம். வளைகுடா நாடுகளில் போர்கள் நடைபெற்றாலும் எந்த போரிலும் துபை பங்கேற்றதில்லை. அதேவேளை, அங்கு கண்டறியப்பட்ட எண்ணெய், அதனை பொன்விளையும் பூமியாக மாற்றி விட்டது.

போரும் இல்லை, பணமும் அபரிமிதம். அதனால் அந்த சமூகம் தன்னை வேறு செயல்களில் ஈடுபடுத்திக் கொண்டது. நுண்கலைகளை விட, அதிகாரம் நோக்கி தன்னை நகர்த்திக் கொண்டது.

ஆனால் மேற்கத்திய நாடுகளைப் போல் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் காட்டவில்லை.

மாறாக அதன் சாத்தியக் கூறுகளை உச்சக்கட்டமாக பயன்படுத்திக் கொண்டது. அதன்வாயிலாக அதிகார மையமாக தன்னை நிறுவி வருகிறது.

அதிகாரமும், செல்வமும் எங்கு குவிகிறதோ அங்கு போட்டியும் அதன்வாயிலாக சண்டையும் மூளும் என்பது இயற்கையின் விதி.

இப்போதைக்கு அப்படியேதும் நிகழாமல் புதிய, புதிய கட்டுமானங்களை உருவாக்கியும், புதிய புதிய தொழில் மையங்களை நிறுவியும் மானுடகுலம் மேம்பட இப்பெருநகரம் உதவட்டும்.

நன்றி: முகநூல் பதிவு

You might also like