தமிழ்நாட்டில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற முதல் கட்டத் தேர்தலில் பதிவான வாக்குகளின் சதவீதம் 69.46%. இதில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகமாக வாக்களித்து இருக்கிறார்கள். ஏன்? வாக்களிக்கும் விஷயத்தில் ஆண் வாக்காளர்கள் பின்தங்கிப் போனார்கள்.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 81.48% சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்கின்றபோது சென்னையில் 53.96% சதவீதத்திற்குள் வாக்கு சதவீதம் குறைந்து இருக்கின்றன ஏன்?
தமிழகத்தில் தற்போது நிலவும் அதிகபட்சமான வெயிலை ஒரு காரணமாக எடுத்துக் கொண்டால், சென்னையைவிட அதிக வெயில் அடித்த மாவட்டங்களில் வாக்கு சதவீதம் குறையவில்லை. அதனால் வெயிலை ஒரு முதன்மைக் காரணமாக சொல்ல முடியாது.
இவ்வளவுக்கும் பல கட்சித் தலைவர்கள் சென்னையில் கூடுதலாகவே பிரச்சாரம் செய்து இருக்கிறார்கள். ஊடகங்கள் தொடர்ந்து வாக்களிப்பதை வலியுறுத்திக் கொண்டு இருந்தனர்.
இருந்தும் தமிழகத்தின் தலைநகரமாகிய சென்னையில் வாக்களிப்பதில் ஏன் இந்தப் பின்னடைவு? இதற்கு நம்பிக்கைக் குறைவு ஒரு முக்கியமான காரணமா? அரசியல் கட்சிகள் பதிலளிக்கட்டும்.