மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ என்ற நாவலை அடிப்படையாக கொண்டு,அதே பெயரில் உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘ஆடு ஜீவிதம்’.
மலையாளத்தின் புகழ் பெற்ற இயக்குனர் பிளெஸ்சி தாமஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த நஜீப் என்பவர் சவுதி அரேபியாவுக்கு ஆடு மேய்க்கும் வேலைக்குச் சென்று அங்கு மாட்டிக் கொண்டு, அவதிப்படுவதை சித்தரிக்கும் நாவல்,இது.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, எழுத்தாளர் பென் யாமின் இந்த கதையை உருவாக்கி இருந்தார்.
15 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நாவலின் உரிமையை வாங்கிய பிளெஸ்சி, அப்போதே கதையின் நாயகனாக பிருதிவிராஜை ஒப்பந்தம் செய்தார்.
2017-ம் ஆண்டு இந்த படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டு, பூஜையும் போடப்பட்டது..
கொரோனா காலகட்டத்தில், வளைகுடா நாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது
பிருதிவிராஜுடன் அமலா பாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் மொத்த பட்ஜெட் 80 கோடி ரூபாய்.
’ஆடு ஜீவிதம் ‘படம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
முதல் நாளில், இந்த திரைப்படம் இந்தியாவில் 8.50 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 6.50 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது.
இதன் மூலம் உலகம் முழுவதும் 15 கோடி ரூபாயை ’ஆடு ஜீவிதம்’ வசூல் செய்துள்ளது.
கேரளாவின் 400 திரைகளில் இப்படம் வெளியாகியுள்ளது. அங்கு இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
– பாப்பாங்குளம் பாரதி.
#மலையாள_எழுத்தாளர்_பென்யாமின் #ஆடுஜீவிதம் #இயக்குனர்_பிளெஸ்சி_தாமஸ் #எழுத்தாளர்_பென்_யாமின் #பிருதிவிராஜ் #அமலா_பால் #ஏ_ஆர்_ரஹ்மான் #writer_benyamin #Aadujeevitham #Malayalam_writer_Benyamin #blessy_thomas #prithviraj #arrahman #director_blessy_thomas