அருகில் உள்ளவர்களைப் புரிந்துகொள்வோம்!

படித்ததில் ரசித்தது:

கெட்டிக்காரத்தனம் என்பது படிப்பு சாமர்த்தியம் அல்ல. மொழி வலிமை அதிகரித்துக் கொள்வது அல்ல. அது கணித மேன்மையோ காசு சம்பாதிக்கிற சாமர்த்தியமோ அல்ல.

மனிதர்களை உற்றுப் பார்க்கும் மிகுந்த நிதானமே கெட்டிக்காரத்தனம். அவர்களுடைய குணாதிசயங்களை கிரஹித்து புரிந்து கொள்வதே கெட்டிக்காரத்தனம்.

மனிதர்களோடு வாழ்பவன் மனிதர்களை புரிந்து கொள்ளாமல் வேறு என்ன புரிந்து கொண்டு வெற்றி பெற முடியும். இந்த பூமியின் பிரச்சனையே மனிதன் மனிதனை புரிந்து கொள்ளாததுதான்.

  • பாலகுமாரன்
You might also like