– நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
தூத்துக்குடியில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், சேதமடைந்த பகுதிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு செய்தார்.
முன்னதாக வெள்ள நிவாரண பணிகளுக்கு போதுமான நிதியை ஒன்றிய அரசு வழங்க வலியுறுத்தி நிர்மலா சீதாராமனிடம் தமிழ்நாடு அரசு சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்ட ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், நிவாரண நிதியின் அவசியத்தை வலியுறுத்தி 72 பக்கங்கள் கொண்ட மனுவையும் அளித்துள்ளனர்.
மாநில பேரிடர் நிவாரண நிதி போதுமான அளவு இல்லாததால், ஒன்றிய அரசு போதுமான நிவாரண நிதியை வழங்கிட வேண்டுமென அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேரில் பார்வையிட வந்த நிர்மலா சீதாராமனிடம் பொதுமக்கள் வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டி கோரிக்கை வைத்தனர்.
அதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பு இல்லை. சுனாமியைக் கூட தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.