கமலுக்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் வாழ்த்து!

தமிழ் சினிமாவில் 69 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது சினிமா பத்திரிகையாளர் சங்கம். அதன் கெளரவ உறுப்பினரும் நடிகரும் அரசியல் தலைவருமான கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று (நவம்பர் 7) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் D.R.பாலேஷ்வர், செயலாளர் R.S. கார்த்திகேயன், பொருளாளர் A. மரிய சேவியர் ஜாஸ்பெல், செயற்குழு உறுப்பினர் M.மோகன்ராஜ் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

You might also like