படித்ததில் ரசித்தது:
கல்வி என்பது பாடப்புத்தகத்தில் உள்ளதை அப்படியே மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குவதல்ல. மாறாக மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவது.
ஒருமுறை வள்ளலார் அவர்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது அவரது ஆசிரியர் அவருக்குப் பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது,
“ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்”
– என்ற உலக நீதியைச் சொல்லும்படி ஆசிரியர் வள்ளலாரிடம் சொல்லியும் வள்ளலார் அவர்கள் அதனை சொல்லாமல் இருந்துள்ளார்.
ஆசிரியர், “ஏன் நீ சொல்லாமல் இருக்கிறாய்?” என்று சற்று அதட்டலாகக் அவரிடம் கேட்டபோது…
ஐயா!, “இறைவனிடத்தில் வேண்டாம், வேண்டாம் என்று சொல்வதை விட ஏதாவது வேண்டும் வேண்டும் என்று கேட்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்” என்றாராம் வள்ளலார்.
“சரி… நீ வேண்டுமானால் வேண்டும் வேண்டும் எனப் பாடு பார்ப்போம்” என கூறியுள்ளார் ஆசிரியர்.
உடனே வள்ளலார் அவர்கள், “ஒருமையுடன் உனது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்… உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்று பாடியுள்ளார்.
ஆசிரியர் வள்ளலாரின் திறமையை பாராட்டியுள்ளார்.
மாணவர்களின் திறனைப் பாராட்டி, மகிழ்ச்சிப்படுத்தி, ஊக்கப்படுத்தி அவர்கள் அறிவை, ஆற்றலை, வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவும், தன்னம்பிக்கை தரும் கல்வி முறையே சிறந்த கல்வி.
– நன்றி: முகநூல் பதிவு