அருமை நிழல் :
அரசியலிலும் திரையுலகிலும் நாடக உலகிலும் ‘கருணாநிதி’யாக கோலாச்சி கொண்டிருந்தவருக்கு ‘கலைஞர்’ என்ற பட்டத்தை கொடுத்து அதையே அவரது அடையாளமாக பிறர் கருதும் அளவுக்கு மாற்றியமைத்தவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா.
திரை உலகிலும் நாடக உலகிலும் பதித்த அவரது நூற்றாண்டு 2007 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டபோது சென்னையில் மணா தொகுத்து வெளியிட்ட ‘எம்.ஆர்.ராதா காலத்தின் கலைஞன்’ என்கிற நூலுக்கான வெளியிட்டு விழா சிறப்பாக நடந்தது.
அதில், திரைக் கலைஞரான சிவக்குமார், தமிழருவி மணியன், கொளத்தூர் மணி, சீமான், நா.முத்துக்குமார், சார்லி, ஓவியா, பாமரன் இவர்களுடன் பதிப்பாளரான மனுஷ்யபுத்திரன், நூலாசிரியரான மணா மற்றும் இவர்களுடன் எம்ஆர் ராதாவின் மகளும் இந்த விழாவில் கலந்து கொண்டது சிறப்பு.