முதலாளித்துவத்தின் மிக மோசமான குணம்!

படித்ததில் பாதித்தது:

விவசாயிகளின் நெருக்கடி அவர்களை மீளமுடியாத வறுமையில் தள்ளுகிறது. நிலத்தையும் வாழ்க்கையையும் இழந்த விவசாயிகள் நகரங்களை நோக்கி இடம்பெயர்கிறார்கள். அங்கு ஏற்கனவே உள்ள வேலையில்லா தொழிலாளர்களோடு சேர்கிறார்கள். வேலையின்மை மேலும் அதிகரிக்கிறது.

இவ்விதமாக விவசாயிகளின் வறுமையானது, அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களின் பேரம் பேசும் சக்தியை வலுவிழக்கச் செய்வதோடு, மக்கள் தொகையின் மொத்த வறுமையும் அதிகரிக்கிறது. நவீன தாராளமய முதலாளித்துவத்தின் மிக முக்கியமான குணம் இதுதான்!

– பேரா.பிரபாத் பட்நாயக்

You might also like