பெண்களுக்கு ஏற்ற இரவு நேர ஆடைகள்!

இரவு நேர தூக்கம் என்பது உடல் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாத ஒன்று. உறங்கும் இடம், சூழ்நிலை, படுக்கை விரிப்புகள் முக்கியமானதாக உடுத்தும் ஆடைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு.

பகல் நேரங்களில் அலுவலகம், மற்றும் வீட்டு வேலை என இருக்கும்போது அதற்கு ஏற்றது போல் நாம் ஆடைகளைத் தேர்வு செய்வோம்.

சுடிதார், ஜீன்ஸ், டி-ஷார்ட், ஸ்கர்ட் மற்றும் டாப், புடவை என விதவிதமான ஆடைகளை இறுக்கமாகவும், தளர்வாகவும் பகலில் அணிந்திருப்பார்கள்.

ஆனால், இரவு நேர தூக்கத்திற்கு இது சரியாக இருக்காது. ஆழ்ந்த தூக்கத்திற்கு ஆடைகள் முக்கியமானதாக கருதப்படுகிறது.

பெண்களுக்கு ஏற்ற இரவு நேர ஆடைகளை எப்படி தேர்வு செய்வது என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

இரவில் தூங்கும் போது எடை அதிகம் இல்லாத லேசான ஆடைகளை அணிந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

பெரும்பாலான பெண்களின் தேர்வு என்றால் முதலில் நைட்டிகளுக்கு தான் முதலிடம் கொடுக்கப்படுகிறது.

வித விதமான மாடல்களில் எத்தனையோ ஆடைகள் இருக்கின்றன.

அவர்கள் கவர்ச்சியான தோற்றத்தையும் தரக்கூடியதாக இருந்தாலும் தூக்கம் என்று வரும்போது உடலை உறுத்தாத ஆடையாக இருக்க வேண்டும்.

நைட்டிகள் :

கழுத்தில் இருந்து பாதம் வரை முழுமையாக உடலை மூடியபடி இருக்கும். பெரும்பாலான பெண்களின் தேர்வாக இருக்கிறது நைட்டி.

ஞாயிற்றுகிழமை என்றால் பகல் பொழுதில் வீட்டு வேலை செய்யும் போதும் சரி, இரவு தூங்கும் வரை இந்த நைட்டியுடன் தான் அன்றைய பொழுது போகும். அந்த அளவுக்கு பெண்களுக்கு ஏற்ற ஆடையாக இருக்கிறது.

ஆனால், இது எல்லோருக்கும் பொருந்துமா என்பது கேள்விக்குறிதான். சில நேரங்களில் இதுவே சைடு ஓபன் இல்லாமல் இருந்தால் நடக்கும் போது தடுக்கி விழ வாய்ப்பு இருக்கிறது.

கோடைக் காலம் என்றால் முன்னாடி ஓபன் இல்லாமல் நைட்டியைத் தேர்வு செய்ய வேண்டாம்.

ஷார்ட் நைட்டி:

முழங்கால் நீளத்துடன் வரக்கூடிய மிக அழகான இளம் பெண்களுக்கான நைட்டி இது. காட்டன் மற்றும் இந்த நைட்டி தரமான பட்டு சாடின் துணியால் பெரும்பாலும் கிடைக்கிறது.

இது மிகவும் மென்மையான மற்றும் மிருதுவாக இருப்பதால் தூக்கத்தின் போது உடலை அழுத்தாமல் இருக்கிறது. உடலுக்கு நல்ல உணர்வை கொடுப்பதால் ஆழ்ந்த தூக்கத்திற்கு சிறந்த ஆடையாக இருக்கும்.

நைட் கவுன்:

உடுத்திக்கொள்ள மிருதுவாகவும், தளர்வாகவும் பருத்தி, பட்டு, பாலிஸ்டர், சாடின் துணியால் ஆனது இந்த நைட் கவுன். இது இரவுக்கு ஏற்ற ஆடையாக இருக்கும்.

நைட் கவுன் ஸ்லீவ்கள் மற்றும் ஸ்லீவ்லெஸ் மாடலிலும் வருகிறது உங்களுக்கு எது ஏற்றது என்பதை தேர்வு செய்ய வேண்டும். பொதுவாக இந்த மாதிரியான ஆடைகள் தூக்கத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

லாங் டி-ஷர்ட்:

இளம் பெண்களுக்கு ஏற்ற ஆடை இந்த டி-ஷார்ட் கச்சிதமாக பொருத்தமாக இருக்கும்.

பெண்கள் மட்டும் இருக்கும் அறையில், அல்லது புதிதாக திருமணமான தம்பதிகள் இருக்கும் போது சிறந்த ஆடையாக இருக்கும்.

முழங்கால் வரை மட்டுமே இருக்கக்கூடிய இந்த டி ஷார்ட் கோடைகாலத்தில் தூக்கத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

நைட் சூட்:

இது பார்ப்பதற்கு பைஜாமா மாதிரி இருந்தாலும் இரவுக்கு இதுவும் ஏற்றதாக இருக்கும். வெளியூர் செல்லும் போது நைட்டிக்கு பதில் இந்த ஆடை ஏற்றதாக இருக்கும்.

நாம் சுற்றுலா அல்லது வேறு எங்கு வெளியிடத்தில் நாம் அறையில் தங்கும்போது இந்த ஆடை சிறந்ததாக இருக்கும்.

இரவு நேரம் தங்கியிருக்கும் இடத்தை சுற்றி ஒரு நடைபயணத்துக்கும் ஏற்றதாக இருக்கும். ஆகையால் இரவில் வெளியே தங்குவதாக இருந்தால் இந்த ஆடை உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும்.

டி – ஷார்ட் மற்றும் தளர்வான பேண்ட்:

வெளியிடங்களுக்கு செல்லும் போது பால் ஊட்டும் தாய் மாருக்கு ஏற்ற ஆடையாக இருக்கும். தற்போது டி ஷார்ட் முன் பகுதியில் டிசைனுடன் ஜிப் வைத்து வருகிறது.

இது குழந்தையுடன் வெளியூர் சென்றிருந்தால் அல்லது வீட்டில் இருக்கும்போது சவுகரியமாக உணரும் தாய்மார்களுக்கு ஏற்ற உடையாக இருக்கும்.

ஆடை விலகும் என்ற அச்சம் இல்லாமல் இரவில் எளிதாக குழந்தைக்கு பால் ஊட்டி விட்டு நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும்.

டி ஷர்ட் மற்றும் ஸ்கர்ட்:

இதுவும் இரவு தூக்கத்திற்கு வசதியான ஒரு ஆடையாகப் பார்க்கப்படுகிறது. தளர்வான டி – ஷர்ட் மற்றும் ஸ்கர்ட்டை இரவில் அணியும்போது புத்துணர்ச்சியாக உணர முடியும். இந்த ஆடையே தற்கால இளம் பெண்களின் தேர்வாகவும் பார்க்கப் படுகிறது.

– யாழினி சோமு

You might also like