நினைவில் நிற்கும் வரிகள்:
வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே
(வெட்டி வேரு…)
பச்ச கிளியோ பொட்டுகிருச்சு இச்ச கிளியோ ஒத்துக்கிருச்சு
வச்ச நெருப்பு ஒத்திkகிருச்சு பச்ச மனச பத்திக்கிருச்சு
கைய கட்டி நிக்கச் சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது
காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது
சாமி கிட்ட கேளு யாரு போட்ட கோடு
பஞ்சுக்குள்ள தீய வெச்சு சுத்தி வச்சவக யாரு
(வெட்டி வேரு…)
உன்ன கண்டு நான் சொக்கி நிக்குறேன்
கண்ணுக்குள்ள நான் கண்ணி வெக்கிறேன்
சொல்லாமத் தான் தத்தளிக்கிறேன்
தாளாமத் தான் தள்ளி நிக்கிறேன்
பாசம் உள்ள பந்தம் இது பாவமுன்னு சொல்லாது
குருவி கட்டும் கூட்டுக்குள்ள குண்டு வெக்கக் கூடாது
புத்தி கேட்ட தேசம் பொடி வெச்சு பேசும்
சாதி மத பேதம் எல்லாம்
முன்னவங்க செஞ்ச மோசம்
(வெட்டி வேரு…)
பாரதிராஜா இயக்கத்தில் ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் நடிப்பில் -1985-ல் வெளிவந்த ‘முதல் மரியாதை’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் வரிகளை எழுதியவர் வைரமுத்து.