ராவணனின் அகங்காரத்தால் பற்றி எரிந்த இலங்கை!

மக்களவையில் உதாரணம் கூறிய ராகுல்

எம்.பி. பதவி நீக்கம் ரத்துக்கு பிறகு முதல் முறையாக மக்களவையில் எம்.பி. ராகுல்காந்தி பேசினார்.

ராகுல்காந்தி பேசத் தொடங்கியதும் பாஜக உறுப்பினர்கள் கூச்சலிடத் தொடங்கினர். எனினும், பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து ராகுல்காந்தி பேசத் தொடங்கினார்.

”சில நாட்களுக்கு வன்முறை நடந்த மணிப்பூருக்கு முன்பு நான் சென்ருந்தேன். ஆனால், பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை.

மணிப்பூர் இந்தியாவில் இல்லை என அவர் நினைத்து கொண்டிருக்கிறார். வன்முறையால் மணிப்பூரை இரண்டாக பிளந்துள்ளனர்.

மணிப்பூரில் படுகொலை நிகழ்ந்துள்ளது. தேசத் துரோகிகள் பாரத மாதாவை படுகொலை செய்துள்ளனர்.

என்னுடைய ஒரு தாய் இங்கே அமர்ந்திருக்கிறார். மற்றொரு தாயை மணிப்பூரில் கொன்றிருக்கிறீர்கள்.

மணிப்பூரில் ராணுவத்தைப் பயன்படுத்தி இருந்தால் ஒரே நாளில் அமைதியை கொண்டு வரலாம். ஆனால், அதை அரசு செய்திடவில்லை.

அன்று ராவணனின் அகங்காரத்தால் இலங்கை பற்றி எரிந்தது. இன்று அரசின் அகங்காரத்தால் அரியானா மற்றும் மணிப்பூர் மாநிலங்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன.

ராவணன் கூட மக்கள் பேச்சைக் கேட்டார். ஆனால் ஜனநாயக ஆட்சி செய்து வரும் அரசு மக்களின் பேச்சை கேட்கவில்லை” என்று ஆவேசமாக ராகுல்காந்தி பேசினார்.

You might also like