தொழில்நுட்பக் கலைஞராக பொன்மனச் செம்மல்!

அருமை நிழல் :

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, முத்துராமன், விஜய நிர்மலா, நம்பியார், அசோகன், சோ, தேங்காய் சீனிவாசன் ஆகியோரது நடிப்பில், ப.நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த படம் என் அண்ணன். 

கே.வி.மகாதேவன் இசையில், 1970 ஆம் ஆண்டு, மே மாதம் 21 ம் தேதி வெளியான இந்தப் படம் மாபெரும் வெற்றிபெற்றது. 

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரபல நாவலாசிரியர்  ஏ.ஜெ. குரோனின் (A. J. Cronin)  எழுதிய பியான்ட் திஸ் பிளேஸ் (Beyond This Place – 1950) என்ற நாவலைத் தழுவி இந்தப் படம் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

அதன்பிறகு இந்தப் படத்தைத் தழுவி, இந்தி, தெலுங்கிலும் படங்கள் உருவாகின.

வெளிப்புறப் படப்பிடிப்பில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன், இயக்குநர் ப. நீலகண்டன், ஒளிப்பதிவாளர் ராமமூர்த்தி.

புகைப்படம் உதவி: ஞானம்.

You might also like