தமிழ்ப் பற்றுள்ள ஓவியங்களை படைத்த வீரசந்தானம்!

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இவர் படைத்த கருங்கல் சிற்பங்கள் 2009 ல் நிகழ்ந்த ஈழப்போரின் அவலங்களையும் மக்களின் பாடுகளையும் சித்தரித்தது.

ஓவியர் வீரசந்தானம் தீவிர தமிழீழ ஆர்வலர். தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற ஈழத்தமிழர்களின் நினைவகத்தை ஓவியத்தால் அலங்கரித்த வீர சந்தானம் அவர்களின் நினைவு நாள் இன்று. இந்த நாளில் அவர் குறித்த சில தகவல்களை இங்கு பார்க்கலாம்

வீர சந்தானம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் திருநாகேஸ்வரம் உப்பிலிகோயில் என்ற சிற்றூரில் வீரமுத்து – பொன்னம்மாள் தம்பதியின் மகனாக பிறந்தார்.

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் பயின்றார். தொடர்ந்து மேல்படிப்பை சென்னையிலும் கற்றார்.

சந்தானத்தின் இளமைக்காலம் பெரும்பாலும் கோயில்களில் கழிந்தது என்பதால் கோயில்களில் இருந்த சிற்பங்களை நகலெடுத்து ஓவியம் பயில தொடங்கினார்.

தொடர்ந்து ராஜஸ்தானில் பனஸ்தலிவித்யா பீட் பல்கலைக் கழகத்தில் பிரஸ்கோ என்னும் சிறப்பு சுவர் ஓவியக் கலையில் பயிற்சி பெற்றார்.

இத்தாலி ஜெய்ப்பூர், அசந்தா வகை ஓவியங்களின் செயல் முறையை தேவன்கி சர்மா என்பவரிடம் கற்றுக் கொண்டார்.

இவர் தன் இளம் வயதில் பள்ளி நாடங்களில் ஆர்வமாக பங்கேற்றார்.

ஓவியக் கலையில் ஏராளமான சாதனைகளை படைத்திருந்தார்.

குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இவர் படைத்த கருங்கல் சிற்பங்கள் 2009 ல் நிகழ்ந்த ஈழப்போரின் அவலங்களையும் மக்களின் பாடுகளையும் சித்தரித்தது.

இவர் ஓவியத்தோடு நிறுத்தி கொள்ளாமல் தமிழ்ப்பற்று மற்றும் தமிழீழத்திற்கு ஆதரவாக வாழ்நாள் முழுவதும் செயல்பட்டார்.

பணி

நெசவாளர் சேவை மையத்தில் பணியில் சேர்ந்தார்.

பின்னர் சென்னை, பெங்களூரு, காஞ்சிபுரம், திரிபுரா, நாக்பூர், மிசோரம் என இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேலை செய்திருக்கிறார்.

25 ஆண்டுகள் அங்கு பணி புரிந்தார். பின்னர் விருப்ப ஒய்வு பெற்றார்.

நடிப்பு

இவர் சந்தியாராகம், அவள் பெயர் தமிழரசி, மகிழ்ச்சி, வேலாயுதம், பீட்சா, ஜன்னல் ஓரம், கத்தி, அனேகன், உறுமீன், ஞானச் செருக்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு ஜுலை 13ம் தேதி உடல் நலக்குறைவால் மறைந்தார்.

– நன்றி: இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்

You might also like