நூலகச் சிறப்பு :
நூலகம் என்பது பொதுமக்களுக்கு அறிவைக் கொடுக்கும் அமுதசுரபி எனலாம். ஒவ்வொரு நூலகமும் ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளது.
அந்த வகையில், ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பொது நூலகம் நூற்றாண்டு கண்ட நூலகமாகும். இந்த நூலகத்திற்கு ஒரு பெருமையுண்டு.
மகாகவி பாரதியார் அவர்கள் இறுதியாகச் சொற்பொழிவு ஆற்றிய இடம் இந்த நூலகம்தான் என்பது நமக்கு ஆச்சரியத்தை அளிக்கும்.
1921-ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 4-ம் நாள் மகாகவி பாரதியார் அவர்கள் இந்த நூலகத்திற்கு வந்து, மனிதனுக்கு மரணமில்லை என்னும் தலைப்பில் உரையாற்றியுள்ளார். அதன்பிறகு அவர் நோய்வாய்ப்பட்டு 11.9.1921 அன்று இயற்கை எய்தினார்.