நடிகை தமன்னா தென்னிந்திய திரைத்துறை ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் அறிமுகமாகியிருக்கிறார். அவருக்கு அங்கேயும் ரசிகர்கள் அதிகம்.
இன்று அவர் ஒரு பான் இந்தியா நடிகையாக மாறியிருக்கிறார். அவரை இந்த இடத்திற்குக் கொண்டு போனதில் பாகுபலி படத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது.
அவரது பளீச் தோற்றமும், நல்ல உயரமும் அவருக்குப் பட வாய்ப்புக்களைப் பெற்றுத் தந்தன.
பாலிவுட்டில் சமீபத்தில் அவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனால் தொடர்ந்து மும்பையிலேயே தங்கி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், பாலிவுட் ஹீரோ விஜய் வர்மாவுக்கும் தமன்னாவுக்கும் காதல் என்று பல நாட்களாகவே தகவல்கள் பரவிவருகிறது.
இருவரும் பல இடங்களில் சேர்ந்தே சுற்றி வருகிறார்கள். கடந்த வாரம் ஒரு ரெஸ்டாரெண்டில் இருவரும் உணவு சாப்பிட்டதை வீடியோவாக மும்பை ஊடகத்தில் வெளியிட்டனர்.
ஆனால், தங்கள் உறவு குறித்து இருவருமே வாய் திறக்கவில்லை. கோவாவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இருவரும் நடனமாடிக் கொண்டே லிப் லாக் முத்தம் பரிமாறிக்கொண்ட வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிறகு மும்பையில் நடந்த பல பார்ட்டிகளில் இருவரிடமும் ஒரு நெருக்கத்தைப் பார்க்க முடிந்தது.
தற்போது இருவரும் இந்தியில் தயாராகும் லஸ்ட் ஸ்டோரி 2ம் பாகத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்தப் படத்தில் இருவருக்கும் நெருக்கமான காட்சிகள் அதிகம் இருந்ததாகவும், அதில் தமன்னா விஜய் வர்மாவுடன் தாராளமாகவே நடித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இதுபற்றி தமன்னா முதன்முதலாகப் பேசியிருக்கிறார்.
விஜய் வர்மாவும் நானும் வெகு இயல்பாகவே நண்பர்களானோம். அவர் என்னிடம் வந்த பிறகு நான் பாதுகாப்பாக உணர்ந்தேன்.
ஒரு பெண்ணுக்கு இது மிகவும் முக்கியமாகப் படுகிறது. நம்பிக்கையும் முக்கியம் விஜய் வர்மாவிடம் அதை நான் பார்க்கிறேன். அவர் இருக்கும் இடத்தில் நான் மகிழ்ச்சியாக இருப்பதை உணர்கிறேன்.
விஜய் வர்மா என் இதயத்தில் சிறப்பு இடத்தைப் பிடித்துவிட்டார். சேர்ந்து நடிப்பதால் மட்டுமே ஒருவருடன் ஈர்ப்போ, மோகமோ ஏற்படாது.
இதேபோன்று பலருடன் அவர் சேர்ந்து நடித்திருக்கலாம். யாருடன் உணர்ச்சிப்பூர்வமாக நடிக்கிறார்களோ, அதுதான் அவர்களிடம் நடிப்பைத்தாண்டிய ஒரு நட்பை ஏற்படுத்தும்.
இப்போது விஜய் வர்மாவிடம் எனக்கு அந்த நட்பு ஏற்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார் தமன்னா.
தமன்னாவே வெளிப்படையாகப் பேசியிருப்பதால் இணையத்தில் ரசிகர்கள் திருமணம் எப்போது என்று கேட்டுப் பதிவிட்டுவருகிறார்கள்.