கனவுப் படத்தின் துவக்கக் காட்சியில் கமல் பேசிய வசனம்!

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனின் கனவுப் படம் ‘மருத நாயகம்.’

அந்தப் படத்தின் துவக்க விழா நடந்தது 1997 ல். சிறப்பு விருந்தினர்களாகச்

சிலர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்கள்.

படப்பிடிப்புக்கு மருதநாயகம் கதாபாத்திரத்திற்கான ஒப்பனையுடன் கம்பீரமாக

கமல் நுழைந்ததும், வந்த சிறப்பு விருந்தினர் பிரிட்டிஷ் மகாராணி, கலைஞர்,

மூப்பனார், சிவாஜி,ஏ.வி.எம். சரவணன் என்று பல பிரபலங்களின் கூட்டம்,

கிளாப் அடிக்கப்பட்டு, காமிரா உயிர் பெறுகிறது.

“ஷாட் ரெடி’’

ஆவேசத்துடன் தன்னுடைய வசனத்தைப் பேசுகிறார் கமல்.

“மண்ணை விலைக்கு வாங்க வந்தவங்க இந்த ஆங்கிலேய, டச், ஃபிரான்சே

எல்லோருமே… இந்த மண்ணை தரகு பேசி விக்கிறான் நம்ம நவாபு.. இரண்டு

பேருமே வந்தவங்க.. வந்தேறிகள்.. சரித்திரம் தெரியாமல் கேள்வி

கேட்கிறாங்க..

எனக்கு இந்த மண்ணோட என்ன தொடர்புன்னு இந்த மண்ணை விக்கிற

வியாபாரிகள் கேட்கிறாங்க..

நான் தாண்டா இந்த மண்ணு.. நான் தான் விதை.. நான் தான் உரம்..

எங்க அப்பன் சாம்பலும், எங்க முப்பாட்டன் சாம்பலும் இந்த மண்ணில்

இருக்கு.. நாளைக்கு நானும் இருப்பேன், இந்த மண்ணுலே.

இந்த மண்ணை விற்க அவனுக்கு மட்டுமில்ல, எனக்குக் கூட உரிமை

இல்லை.

காற்றை விலை பேசுறான்.. கடலை குத்தகை பேசுறான்.. இந்த அற்பத்தனம்,

பண பலம் அதிகமாயிட்டா வந்திடும் போல இருக்கு..

அது எனக்கு வராமல் இருக்கட்டும். இன்ஷா அல்லாஹ்..’’

வசனம் பேசியபடியே தான் அமர்ந்திருந்த சிம்மாசனத்திலிருந்து எழுந்து

நகர்ந்து அவரே ‘கட்’ சொல்கிறார்.

படத்தின் இயக்குநரும் கமல் தான்.

பிரம்மாண்டமான ‘மருத நாயகம்’ படத்தின் துவக்க காட்சிப்புள்ளி இதுதான்!

You might also like