வாழ்வை புரிதலோடு வாழ்வோம்!

படித்ததில் ரசித்தது :

உங்களைப் பற்றிய உங்கள் புரிதலும், உங்கள் வாழ்க்கை பற்றிய உங்களுடைய புரிதலும் சரியாக இல்லையெனில் ஈர்ப்புவிதி உங்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் அதனால் உங்களுக்கு எந்தவொரு பயனும் நிகழாது.

ஏனென்றால், உங்களால் அதை முழுமையாக பயன்படுத்த முடியாது. அதை முழுமையாக அனுபவிக்க முடியாது. உங்களால் அதைக் கொண்டாட முடியாது.

அதனால்தான் புத்தர், வள்ளலார், ரமண மகரிஷி போன்ற மகான்கள் உங்களை நீங்கள் அறிய வேண்டும், விழிப்புணர்வாக வாழ வேண்டும், ஒவ்வொரு உயிரையும் நேசிக்க வேண்டும் என்று கூறினர்.

உங்களைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ளாமல், உங்கள் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ளாமல், உங்களால் எப்படி சரியானதொரு வாழ்க்கையை வாழ முடியும்?

“தன்னை அறியும் அறிவே” ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத தேவை.

உங்களைப் பற்றி நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

நான் யார்?
எனது எண்ணங்கள் எது?
மனம் என்பது என்ன?

நமக்கு ஏன் கோபம் வருகிறது?
ஏன் பயம் வருகிறது?

அன்பு என்பது என்ன?
உயிர் என்பது என்ன?

என்பது போன்ற கேள்விகளை உங்களுக்குள் நீங்கள் கேளுங்கள்.

உங்களை நீங்கள் புரிந்துகொண்டு, உங்கள் வாழ்க்கையை நீங்கள் புரிந்துகொண்டு மகிழ்ச்சியாக வாழுங்கள்.

  • நன்றி: முகநூல் பதிவு
You might also like