தோல்வி என்பது ஒரு வாய்ப்பு!

  • நம்பிக்கை மொழிகள்  

அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் பிறந்த அலெக்சிஸ் ஓஹானியன், உலகப் புகழ்பெற்ற சமூக செய்தி இணையதளமான ரெட்டிட்  நிறுவனத்தின் இணை நிறுவனர். அவரது நம்பிக்கை மொழிகள்…

உங்களுக்குக் கட்டுப்பாடு வேண்டும். சமூக வலைதளங்கள் உங்கள் நேரத்தைத் திருடிக்கொள்ள அனுமதிக்கக்கூடாது.

சொந்த நலனோ அல்லது தொழில்ரீதியாகவோ சமூக வலைதளத்தை குறைவான நேரத்திற்குள் மக்களைக் கவருவதில் மிகச்சரியாக செயல்படவேண்டும்.

பசியோடு இருக்கவே விரும்புகிறேன். எனது வளங்களை மிகச் சிறந்த முறையில் திட்டங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளமுடியும் என உண்மையில் நான் நம்புகிறேன்.

ஒரு புதிய தொழிலைத் தொடங்க உங்களுக்கு மூன்று விஷயங்கள் தேவைப்படும். சிறந்த மனிதர்களுடன் தொடங்கவேண்டும். நுகர்வோர் விரும்புகிற ஒன்றைத் தயாரிக்கவேண்டும். உங்களால் முடிந்த பணத்தைச் செலவு செய்யவேண்டும். மேற்கண்ட ஏதாவது ஒரு குறை இருப்பதால்தான்  பெரும்பாலான ஸ்டார்ட் அப்கள் தோல்வியடைகின்றன.

நான் வளரும்போது, ‘மீதமுள்ள வாழ்க்கையை வாழவேண்டும்’ என்ற வாசகத்தை என் அறையில் எழுதிவைத்திருந்தேன்.  வாழ்க்கை ஒரு வீடியோ விளையாட்டைப் போல இருந்தால், இதுதான் ஒரே ஒரு வாய்ப்பு.

நம்பமுடியாத அளவில் சமூக வலைதளங்கள் வேகமாக மாறிவருகின்றன. எனவே திறந்த மனம் மற்றும் வேகத்துடன் அதை உங்களுடன் வைத்திருக்கவேண்டும்.

முதலில் நம்மை நாம் தோற்கடிக்கும்போது, அவர்கள் அவர்களுக்காகவே தோற்கடிக்கப்படுவார்கள்.

இந்த உலகத்துடன் சேர்ந்து ஒன்றை நீங்கள் உருவாக்கி பகிர்ந்து கொள்ளும்போது, யாரும் அதைப் பற்றி மட்டமாக நினைக்கமாட்டார்கள்.

நல்ல இதழியலுக்கு எதுவும் மாற்றாக இருக்கமுடியாது.

தோல்வி என்பது ஒரு வாய்ப்பு.

இணையம்தான் உலகின் மிகப்பெரிய நூலகம், மிகப்பெரிய மேடை.

பதவியில் இருப்பவர்களைக் கண்டு பயப்படாதீர்கள்.

இணையத்தின் மிகப்பெரிய விஷயமே, அது புதிய எண்ணங்களின் மிக சுதந்தரமான ஒரு சந்தை.

நீங்கள் வெற்றியை விரும்பினால், உங்கள் கட்டுப்பாட்டை கொஞ்சம் இழக்க நேரிடும்.

நமக்கு ஒருவர் நல்வழியைக் காட்டும்வரை, அது உடைந்துவிட்டது என்பதை நாம் உணர்வதில்லை.

நான் கிண்டலை விரும்புகிறேன். விமர்சனத்தை விரும்புகிறேன்.

You might also like