கனிந்த மனம் வீழ்வதில்லை…!

நினைவில் நிற்கும் வரிகள் :

அமைதியான நதியினிலே ஓடும் – ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும்
கலங்கவைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி
நின்றால் ஆடும்…

(அமைதியான)

தென்னம் இளங்கீற்றினிலே
தாலாட்டும் தென்றலது
தென்னைதனைச் சாய்த்துவிடும்
புயலாக வரும்பொழுது

(அமைதியான)

ஆற்றங்கரை மேட்டினிலே
ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை
கனிந்தமனம் வீழ்வதில்லை

(அமைதியான)

நாணலிலே காலெடுத்து
நடந்து வந்த பெண்மை இது
நாணம் என்னும் தென்றலிலிலே
தொட்டில் கட்டும் மென்மை இது

(அமைதியான)

அந்தியில் மயங்கி விழும்
காலையில் தெளிந்துவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால்
துன்பநிலை மாறிவிடும்

(அமைதியான)

1964-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘ஆண்டவன் கட்டளை’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடால் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

You might also like