நிறத்தால் இந்தியர்கள், கருத்து, ரசனையால் ஆங்கிலேயர்கள்!

‘மெக்காலே கல்வி முறை’ என்று அடிக்கடி இப்போது சொல்கிறோமே, ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கல்வித் திட்டத்திற்கான கற்பித்தல் குழுவின் தலைவராக இருந்த மெக்காலே 1835 ல் ஆங்கிலேய அரசுக்குக் கொடுத்த குறிப்பிலிருந்து…
“நம்மால் நிச்சயமாக இந்த நாட்டைச் சேர்ந்தவரை ஆங்கிலேயராக மாற்ற முடியும்.

அதனை நோக்கியே நம்முடைய முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இவர்கள் ரத்தத்தாலும், நிறத்தாலும் இந்தியர்களாகவும், அறிவு, ஒழுக்கம், ரசனை, கருத்து போன்றவற்றில் ஆங்கிலேயர்களாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

இங்குள்ள மக்கள் தங்களது பாரம்பரியத்திலும் கலாச்சாரத்திலும் மொழியின் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்களாய் இருக்கிறார்கள்.

இவர்களை ஆள்வதற்கு முதலில் அவர்களது மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் இருந்து அவர்களைப் பிரிக்க வேண்டும்”.

You might also like