இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் மனோபலா. தமிழில் கிட்டத்தட்ட 700 படங்களுக்கு மேலாக குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
பெரும்பாலும் காமெடி வேடங்களில் நடித்து வரும் இவர் தனது யூடியூப் சேனல் மூலம் பிரபலங்களை பேட்டியெடுத்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினார்.
இதனிடையே 69 வயதுடைய அவர் இன்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். சினிமா வட்டாரங்கள் உட்பட ரசிகர்கள் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.