இன்றைய நச் :
அவனுக்குப் பதற்றமாகிவிட்டது;
மரத்தை உலுக்கிக் கேட்டான்
நீ ஒரே ஒரு முறை மட்டுமே காய்க்கும்
ஒரே ஒரு அபூர்வக் கனி எங்கே?
மரம் நிதானித்தக் குரலில்
அவனிடம் சொன்னது
இதற்கா இவ்வளவு தூரம்
மலையேறி வந்தாய்?
இப்போதுதானே
அதை உனக்காகக்
கீழே உதிர்த்தேன்!
– வண்ணதாசன்