எம்ஜிஆர் – ஜானகி சிலைகளுக்கு மரியாதை செய்த முதல்வர்கள்!

கேரள மாநிலம் வைக்கத்தில் தீண்டாமைக்கு எதிராக நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவையொட்டி அங்குள்ள வைக்கம் போராட்ட நினைவிடத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் பங்கேற்று பேருரையாற்றினர்.

முன்னதாக வைக்கம் போராட்ட நினைவிடத்திற்கு எதிரே உள்ள பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் மற்றும் அன்னை ஜானகி அம்மையாரின் இல்லத்திற்கு இரு மாநில முதலமைச்சர்களும் வருகை தந்தனர்.

அவர்களுக்கு பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் மற்றும் ஜானகி அம்மையாரின் குடும்பத்தினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதோடு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோருக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

பின்னர் அங்குள்ள பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் மற்றும் அன்னை ஜானகி அம்மையாரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் சென்னை, டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் முனைவர் குமார் ராஜேந்திரன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

You might also like