குளிரும் வெயிலும் கலந்த கொடைக்கானல் தட்பவெட்பம்!

கொடைக்கானலில் வார விடுமுறை தினமான நேற்று சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.

மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், பில்லர் ராக், பசுமை பள்ளத்தாக்கு, கோக்கர்ஸ் வாக் என அனைத்து தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து இயற்கையின் பசுமை கொஞ்சும் அழகினை கண்டு ரசித்தனர்.

அதோடு ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் ரைய்டிங் செய்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர்.

கொடைக்கானலில் கடந்த பல நாட்களாக பகலில் இதமான வெயிலும், இரவில் நடுங்கும் குளிரும் நிலவி வருகிறது.

இந்த மாறுபட்ட சூழலை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்து சென்றனர்.

கொடைக்கானலில் மாலை நேரம் தொடங்கி மறுநாள் அதிகாலை வரை கடும் குளிர் நிலவி வருகிறது. ஒரு சில இடங்களில் 5 டிகிரி செல்சியஸ் வரை குளிர் நிலவி வருகிறது.

குறிப்பாக ஏரி பகுதி அருகேயுள்ள ஜிம்கானா பகுதியில் உறைபனி ஏற்படுகிறது.

இந்த கடும் குளிர் இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like