கோவையில் ஈஷா சார்பில் மஹாசிவராத்திரி நிகழ்வு நேற்று முன் தினம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி முழுவதும் ஜக்கி வாசுதேவ் காலில் செருப்பு அணிந்தபடிதான் இருக்கிறார்.
ஆதியோகி சிலையின் கீழ், ருத்திராட்ச தீட்சைக்காக ருத்திராட்ச மணிகளை கொட்டி வைத்திருக்கிறார்கள். அதன் மீது வில்வ இலைகளை தூவும்போதுகூட ஜக்கி செருப்பை கழட்டவில்லை. பின்னர் நமஸ்கரிக்கும்போதும் செருப்பு காலில்தான் இருந்தது.
இதனைத் தொடர்ந்து, ஆங்கிலத்தில்தான் அவர் உரையாற்றினார். அதை ஒருவர் தமிழில் மொழிபெயர்த்து சொல்கிறார்.
ஜக்கி தமிழில் பேசிய ஏராளமான வீடியோக்கள் உள்ளன.
ஆனால், மஹா சிவராத்திரி விழாவில் பெரும் கூட்டம் கூடியிருக்கும்போது, தமிழில் பேச அவருக்கு என்ன தயக்கம்?
இதுஒருபுறமிருக்க, இதுவரை நடந்த கலை நிகழ்ச்சிகளில் தமிழ் இல்லை. வடநாட்டு இசைகள் ஒலிக்கப்பட்டன, பாடல்கள் பாடப்பட்டன.
நிகழ்ச்சி வடநாட்டிலா நடக்கிறது? திருமுறைகள் இசைக்கப்படவில்லை. தேவாரம், திருவாசகத்தைத் தாண்டி தமிழ் மண்ணில் ஈசனை போற்றிவிட முடியுமா?
திருமுறைகளை ஈஷா ஒலிவடிவில் சிறப்பாக வெளியிட்டிருக்கிறது என்பதை மறுக்கவில்லை. இந்த நிகழ்வில் புறக்கணிக்கப்படுவது ஏன் என்பதுதான் கேள்வி.
மஹாசிவராத்திரி விழாவுக்கான டிக்கெட்டுகள் ஒன்றரை லட்சம் ரூபாயில் தொடங்கி, 5 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டதாக தெரிகிறது.
தமிழ் வேண்டாம் என்றால், தமிழர்கள் மட்டும் வேண்டுமா? தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரத்தை ஒதுக்கிவிட்டு ஜக்கி நடத்தும் எந்த நிகழ்ச்சியும் இந்த மண்ணை, மக்களை இழிவுபடுத்துவதே ஆகும்.
நன்றி: ஊடகவியலர் கோபிநாத்தின் முகநூல் பதிவு