வானொலி: வெகுஜன ஊடகத்தின் முன்னோடி!

இன்று உலக வானொலி தினம்

ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ )ஆண்டு தோறும் பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி தினமாக கடைபிடிக்கிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு ஐ.நா. 36-வது பொதுச்சபை கூட்டத்தில் முதன்முதலாக ஸ்பெயின், நவம்பர் 3-ம் தேதியை உலக வானொலி தினமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது.

அதன் பின்னர் பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது.

நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி., மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்ட போதிலும், வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA) முன்னோடி வானொலி தான்.

ரேடியஸ் (Radius) என்ற லத்தீன் மொழியில் பிறந்தது தான் ரேடியோ என மருவியுள்ளது.

ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல், மைக்கேல் பாரடே இரு விஞ்ஞானிகள் மின்காந்த அலைகளை, ஒலி அலைகளாக மாற்றும் கருவியை கண்டறிந்தனர்.

இவர்களை பின்பற்றி ஹென்றிச் ஹெர்ட்ஸ் என்பவர், மின்காந்த அலைகளை, டிரான்ஸ்மீட்டராக மாற்றினார்.

பின்னர், இயற்பிலுக்கான நோபல் பரிசு (1909) பெற்ற இத்தாலியைச் சேர்ந்த கூலில்மோ மார்கொனி, (1874-1937) வானொலியை கண்டறிந்தார்.

இன்று உலக முழுவதும் ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றும் மக்களுக்கு பல தகவல்களை அளிக்கும் சாதனமாக வானொலியின் சேவை தொடர்கிறது.

You might also like