‘எட்றா வண்டியெ’ நாவலின் மையம்!

சென்னை புத்தகக் காட்சி: நூல் அறிமுகம்

கொங்கு பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர் வா.மு. கோமு, தன் புதிய நாவல் பற்றி சுவையான பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

“தமிழில் எடிட்டிங் என்கிற பகுதியே இல்லை. நண்பர் நஞ்சுண்டன் அதற்கான பணிகளை கர்நாடகாவிலிருந்து கொண்டு ஆசைப்பட்டார். அது நிறைவேறாமல் போய்விட்டது.

இனி யாரேனும் தமிழிலில் எடிட்டிங் செய்ய வந்தால் வேடிக்கை மனிதராகி விடுவார். என் ‘எட்றா வண்டியெ’ நாவலை எடிட்டிங் செய்து எனக்கே 2000 ரூபாய் கொடுத்த மனிதரை, நான் கடைசி காலம் வரை சந்திக்க முடியாமலே போய்விட்டது.

நடுகல் இதழில் அவர் ஒரு கன்னட கதையை மொழிமாற்றம் செய்து கொடுத்து இதழிலும் வெளிவந்தது. பணம் அனுப்ப தயாரானார். எனக்கு அக்கெளண்ட் நெம்பரே கிடையாது எனச் சொல்லி எஸ்கேப் ஆகிட்டேன்.

எதற்காக இவை என்றால்.. என் வரவிருக்கும் கள்ளி நாவலை நானே எடிட்டிங் பண்ணி வருகிறேன். போக இந்த நாவலும் உயிர்மையில் வருகையில் நானே எடிட்டிங் செய்துதாம் வருகிறது.

கள்ளியில் 3000 வார்த்தைகளும், சினேகிதிகளில் 2000 வார்த்தைகளும் குறைவாக செப்பனிடப்பட்டிருக்கின்றன. வாசிப்பாளர்கள் நச்சென்று வாசிக்க எடிட்டிங் தமிழுக்கு தேவைதான். செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

You might also like