அமேசான் நிறுவனத்தில் அதிகளவில் பணியாளா்களை நீக்க முடிவு!

இந்தியாவில் அமேசான் நிறுவனத்தில் 10,000-க்கும் மேற்பட்டோர் நேரடியாகப் பணியாற்றி வருகின்றனா். 

இந்நிலையில் இந்த ஆண்டில் பொருளாதார நிச்சயமற்ற சூழல் நிலவும் என்பதால் அதனைக் கருத்தில் கொண்டு 18,000-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நீக்க முடிவு செய்துள்ளதாக அமேசான்  நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் பணிநீக்கம் செய்யப்படுவோர் விவரம் 18-ம் தேதி தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடா்பாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆண்ட்ரூ ஜெஸ்ஸி பணியாளா்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், ”நிறுவனத்தின் ஆண்டு செயல்திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் பணியாளா் குறைப்பு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதைவிட 80 சதவீதம் அதிகமாக பணிநீக்கம் நடைபெற வாய்ப்புள்ளது. அமேசான் ஸ்டோர், பொதுமக்கள் தொடா்பு மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் அதிகப் பணிநீக்கம் நடைபெற வாய்ப்புள்ளது” எனக் கூறியுள்ளார்.

இந்தியாவில், சில்லறை மற்றும் பிற விற்பனை நிறுவனங்களுக்கு மொத்த கொள்முதல் அடிப்படையில் பொருள்களை விநியோகிக்கும் பிரிவை நிரந்தரமாக மூட அமேசான் நிறுவனம் கடந்த நவம்பா் மாதம் முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

You might also like