திராவிட இயக்கக் கொள்கையை எம்.ஜி.ஆர். ஏற்றுக்கொண்ட பின் புராணப் படங்களில் நடிப்பதை விட்டுவிட்டார்.
அன்றாடம் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையமாகக் கொண்ட கதைகளையே தேர்வு செய்து நடித்தார். எனவே அவருக்கு ‘புரட்சி நடிகர்’ என்ற பட்டத்தை கருணாநிதி வழங்கினார்.
திரைப்படங்களில் நடித்து வரும் வருவாயைக் கொண்டு மக்களுக்கு எம்.ஜிஆர். செய்துவந்த தொண்டுகளைப் பற்றி நன்கு தெரிந்த ‘கல்கண்டு’ ஆசிரியர் தமிழ்வாணன், ‘மக்கள் திலகம்’ என்று குறிப்பிட்டு எழுதத் தொடங்கினார்.
எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்தபோது, அவருக்கு ஆதரவாக மாணவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அப்போதைய அரசு அவர்களைச் சிறையில் அடைத்தது.
இதைக் கண்டித்து சென்னை கடற்கரையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கே.ஏ. கிருஷ்ணசாமி, எம்.ஜி.ஆருக்கு ‘புரட்சித் தலைவர்’ என்ற பட்டத்தை வழங்கினார்.
திருப்பராய்த்துறை திக்கற்ற மாணவர் இல்லத்திற்குக் கட்டடம் கட்ட உதவி செய்ததற்காக, கிருபானந்த வாரியாரால் ‘பொன்மனச் செம்மல்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.
-தகவல்: குமுதம் வார இதழ்