நினைத்தேன் வந்தாய் நூறு வயது பாடலைக் கேட்டு நெகிழ்ந்த எம்ஜிஆர்!

‘காவல்காரன்’ படம் முக்கால்வாசி முடியும் நேரத்தில் எம்.ஜி.ஆர் குண்டடிபட்டார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, ஆறேழு மாதச் சிகிச்சைக்குப் பிறகு, அவர் கலந்து கொண்ட முதல் நாள் ஷூட்டிங் ‘காவல்காரன்’ படத்தினுடையது தான்.
அன்று ஒரு பாடல்காட்சி படமாகப்பட இருந்தது.

என்ன பாடல் தெரியுமா?

“நினைத்தேன் வந்தாய் நூறு வயது” பாடல்.

இதனால் எம்.ஜி.ஆர் அன்று படப்பிடிப்புக்கு வரும்போதே ஒரு புதுமை பண்ண விரும்பினோம். அவர் கேட்டுக்குள் வந்து காரில் இறங்கியதும் அந்தப் பாடலை ஒலிபரப்ப முடிவு செய்தோம்.

இதை சஸ்பென்ஸாக வைத்திருந்தோம்.

எம்.ஜி.ஆர் படப்பிடிப்புத் தளத்திற்கு வந்தார். காரிலிருந்து அவர் இறங்கியதும், “நினைத்தேன் வந்தாய் நூறு வயது” பாடல் ஒலிபரப்பானது.

காரிலிருந்து செட்டுக்குள் கால் வைத்ததும் இந்தப் பாட்டைக் கேட்டதும் நெகிழ்ந்து போனார் எம்.ஜி.ஆர். அவர் மறுபிறவி எடுத்து மீண்டும் நடிக்க வந்திருந்ததால். அன்றைக்கு அவரைப் பார்க்க பிரபல வி.ஐ.பி.க்கள், ரசிகர்கள் என்று பெரும் கூட்டமாய் படப்பிடிப்புத் தளத்திற்கு வந்திருந்தார்கள்.

அன்றைய தினம் அந்தப் பாடல்காட்சியில் நடிக்க உடனே தயாராகிவிட்டார் எம்.ஜி.ஆர். டேக்கின்போது மிக அற்புதமாக டான்ஸ் மூவ்மென்ட்ஸ் கொடுத்தார்.

அவர் பிரமாதமாய் டான்ஸ் பண்ணியதைப் பார்க்க நேர்ந்தது பார்வையாளர்கள் தரப்பிலிருந்து வந்த கரவொலியும் எம்.ஜி.ஆரை முழுக்கவே சந்தோசப்படுத்தியது”

– எம்.ஜி.ஆர் நடித்த ‘காவல்காரன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் அசிஸ்டென்ட் இயக்குநராகப் பணியாற்றி, இதயக்கனி படத்தில் இயக்குநராகவும் பணியாற்றிய ஏ.ஜெகந்நாதன் எழுதிய அனுபவம்:

நன்றி: மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்ட கி.ராமச்சந்திரன் எழுதிய ‘தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.

You might also like