திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என தி.மு.க நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் நாளை காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், மகளிர் மேம்பாட்டுத் துறை, மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பதவியேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
உதயநிதி அமைச்சராகும் அதே நாளில் 4 அமைச்சர்களின் துறைகள் மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிகிறது.
இதனிடையே உதயநிதி ஸ்டாலினுக்காக கோட்டையில் தனி அறை ஒன்று தயாராகி வருவதாகவும், இன்று மாலைக்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை 2-வது முறையாக மாற்றியமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.