– நடிகர் ஜெயராம் நெகிழ்ச்சி
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஜெயராம் 1980 – 1990-களில் மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர்.
தமிழில் தெனாலி, பஞ்ச தந்திரம், துப்பாக்கி போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது முக்கிய கதாபாத்திரங்களில் தனக்கேற்ற ரோலில் நடித்து வருகிறார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜெயராம்.
சிறுவயதில் இருந்தே விவசாயத்தை அதிகம் நேசித்தவர் நடிகர் ஜெயராம்.
இவரின் முன்னோர்கள் விவசாயிகளாக இருந்ததால் அவரும் ஒரு சிறந்த விவசாயியாக இருக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தவர்.
நடிகர் ஜெயராம் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள பெரும்பாவூரில் வசித்து வருகிறார். அங்கு இவருக்கு சொந்தமான மாட்டுப் பண்ணையும் உள்ளது.
சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மாட்டுப்பண்ணையில் 60க்கும் மேற்பட்ட மாடுகளை பராமரித்து வருகிறார் ஜெயராம். இதுதவிர விவசாயமும் செய்து வருகிறார் ஜெயராம்.
இப்போது 8 ஏக்கர் நிலத்தில் 60 -க்கும் மேற்பட்ட பசுக்களை தன் பண்ணையில் வளர்த்து வருகிறார்.
சமீபத்தில் கேரள மாநில விவசாயத்துறை சார்பில் விவசாய தின விழா நடத்தப்பட்டது.
திருவனந்தபுரத்தில் நடத்தப்பட்ட இந்த விழாவில் சிறந்த விவசாயிக்கான விருது நடிகர் ஜெயராமுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த விவசாயி என்ற விருதை கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்கி கௌரவித்துள்ளார்.
இந்த விழாவில் ஜெயராமின் விவசாய பணிகளுக்கு பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன.
அப்போது ஒரு நடிகனாக இருப்பதைவிட விவசாயியாக வாழ்வதை பெருமையாக கருதுகிறேன் எனக் கூறினார்.