இன்றைய நச்:
புத்தகத்தை படித்து
நீச்சல் கற்றுக் கொள்ள முடியுமா?
நீரில் குதி
கையும் காலையும் வீசிப்போடு
முதலில் மூச்சு திணறும்
செத்துப் போய் விடுவோமோ
என்கிற பயம் வரும்
ஏதோ ஒரு நேரம், ஒரு வினாடி
நீச்சல் புரிந்து விடும்;
எந்த வினாடியில்
நீச்சல் கற்றுக் கொண்டாய்
அது உனக்கே புரியாது
நீரில் தவிக்க தவிக்கத்தான்
நீச்சல் புரிந்து விடும்;
எப்படியும் நீச்சல்
தெரிந்தாக வேண்டுமேன்று
ஒரே குறிக்கோளுடன்
நீச்சல் அடிக்க விரும்புவாய் அல்லவா
அதேபோல் தியானத்தையும் விரும்பு;
எல்லா பயிற்சியும் கடினம்தான்
மனதை அடக்கும் பயிற்சி
மற்ற எல்லாவற்றையும் விட
மிகக் கடினமானது!
– பாலகுமாரன்