நூல் அறிமுகம்:
உல்லாசம், விசில், தி லெஜண்ட் படங்களின் இயக்குநர் ஜேடியின் தாயார் திருமதி அமலோற்பவ மேரி டி சாமி, பாண்டிச்சேரி ஸ்பெஷல் என்ற தனித்துவமான சமையல் கலை நூலை எழுதியுள்ளார்.
இந்த நூலின் முதல் பிரதியை மேதகு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் திருமதி தமிழிசை செளந்தரராஜன் அவர்களிடம் வழங்கி அவரது குடும்பத்தினர் வாழ்த்துப் பெற்றனர்.
இந்த நூல் நேர்த்தியான புகைப்படங்களுடன், அழகான வசீகரிக்கும் வடிவமைப்புடன் வந்திருப்பதாக ஆளுநர் தமிழிசை பாராட்டினார்.
பின்னர், டி சாமி குடும்பத்தினர் தங்களது நன்றியைப் பகிர்ந்துகொண்டனர்.
பிரெஞ்ரசுகாரர்கள் தங்களின் தடத்தை பண்பாடு, கலாச்சாரம், கட்டடக்கலை என்று பலவற்றிலும் பதித்துபோனதுபோல சமையலிலும் பிரத்யேகமான அறுசுவையை விட்டுச் சென்றனர்.
இந்தப் புத்தகம் தமிழக-பிரெஞ்சு சுவை கலவையாக புதிய வகை சமையலை நமது மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
ஆங்கிலத்திலும் பாண்டிச்சேரி ஸ்பெஷல் சமையல் நூல் கிடைக்கிறது.
ஜேடி பப்ளிகேஷன் இந்நூலைக் கொண்டு வந்திருக்கிறது. டிஸ்கவரி புக் பேலஸ் விற்பனை நிலையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
******
பாண்டிச்சேரி ஸ்பெஷல்
அமலோற்ப மேரி டி சாமி
வெளியீடு: ஜேடி பப்ளிகேஷன்ஸ்,
ஜேடி இல்லம், 12 சாஸ்திரி சாலை,
சாலிகிராமம், சென்னை – 98
விலை ரூ. 350