போர் விதிகளைப் பின்பற்றாத ரஷ்யா மீது நடவடிக்கை!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, கெர்சன் நகரை கைப்பற்றியிருந்த நிலையில், உக்ரைன் படையினர் கடுமையாக சண்டையிட்டு அதை மீட்டனர். இதையடுத்து ரஷிய படைகள் அங்கிருந்து வெளியேறின.

அந்த நகரின் முக்கிய இடங்களில் பறந்த ரஷியக் கொடிகளை கீழே இறக்கிய உக்ரைன் மக்கள், தங்கள் நாட்டுக் கொடியை ஏற்றினார்கள்.

இந்நிலையில் கெர்சன் நகரை ஆக்ரமித்த போது, ரஷிய ராணுவம், 400-க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை செய்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

அதில், “புலனாய்வாளர்கள் ரஷிய போர்க் குற்றங்களை ஆவணப்படுத்தியுள்ளது. இறந்த உக்ரைன் மக்கள் மற்றும் படைவீரர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இது தொடர்பாக ரஷிய வீரர்கள் மற்றும் கூலிப்படையினரின் கைது நடவடிக்கைகள் தொடர்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

You might also like