தேர்தல்களை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசுக்கு சில பரிந்துரைகளை செய்து வருகிறது.
அந்த வகையில் தற்போது வேட்பாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, “தோ்தல் செலவினங்களுக்காக அரசியல் கட்சி வேட்பாளா்கள் தனி வங்கிக் கணக்கை தொடங்க வேண்டும்,
குறைந்தபட்சம் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஒருநாள் முன்னதாக, அந்த கணக்கை துவங்க வேண்டும்,
அந்த வங்கிக் கணக்கு மூலம் ரூ.10,000-க்கும் அதிகமான தோ்தல் செலவினங்களை மேற்கொள்ள வேண்டும்,
அந்த செலவினங்களுக்கு காசோலை, வரைவோலை அல்லது வங்கி பரிவா்த்தனையை பயன்படுத்த வேண்டும்,
வேட்புமனு தாக்கல் செய்த நாளில் தொடங்கி, தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை தோ்தல் செலவினங்கள் தொடா்பான தினசரி கணக்குகள், வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றை வேட்பாளா்கள் பராமரிக்க வேண்டும்,
வேட்புமனு தாக்கல் செய்யும் நாளில் ஏற்படும் செலவுகளையும் தோ்தல் செலவினங்களில் வேட்பாளா்கள் குறிப்பிட வேண்டும்,
தோ்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து ஒரு மாதத்துக்குள் தோ்தல் செலவின கணக்கை மாவட்ட தோ்தல் அதிகாரியிடம் வேட்பாளா்கள் சமா்ப்பிக்க வேண்டும்” என பல்வேறு நிபந்தனைகளை தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.