பாலிவுட்டில் வில்லனாக கலக்கும் விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட்டிலும் பரபரப்பான நடிகராக வலம் வருகிறார். அங்கு மெர்ரி கிறிஸ்துமஸ், ஜவான் மற்றும் காந்தி டாக்ஸ் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. அதில் அட்லி இயக்கும் ஜவான் படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்கிறார்.

மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தை பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்குகிறார். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இதுதவிர காந்தி டாக்ஸ் என்கிற மெளன படத்திலும் நடிக்கிறார் விஜய் சேதுபதி. படத்தை கிஷோர் பாண்டுரங் இயக்குகிறார்.

தமிழிலும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் சேதுபதி. அவருடன் இணைந்து வடிவேலு நடிக்கவுள்ளார்.

நகைச்சுவை கதையம்சம் கொண்ட படத்தை ஆறுமுக குமார் இயக்கவுள்ளாராம்.

ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்கிற படத்தை இயக்கியவர்தான் அவர். படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

முதல்முறையாக வடிவேலுவும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

You might also like