‘பட்டிக்காட்டுப் பொன்னையா’ படப்பிடிப்பில்!

அருமை நிழல்:

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த படங்களில் பட்டிக்காட்டுப் பொன்னையாவும் ஒன்று. பி.எஸ்.ரங்கா இயக்கத்தில் 1973,  ஆகஸ்ட் 10 ம் தேதி வெளியான இந்தப் படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

‘பட்டிக்காட்டுப் பொன்னையா’ படத்திற்கான ஒரு பாடல் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது, தன்னைப் பார்க்க வந்த தயாரிப்பாளரான ஏ.எல்.சீனிவாசனுடன் எம்.ஜி.ஆர்.

படம் உதவி : ஞானம்

You might also like