தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிப்போம்!

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் தொடங்கிய அவரது யாத்திரை, கேரளா மாநிலத்தைக் கடந்து தற்போது கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் நேற்று கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய குழுவினருடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

அப்போது இந்தியை மட்டும் தேசிய மொழியாக்கி கன்னடம் போன்ற பிராந்திய மொழிகளை அச்சுறுத்தும் எண்ணம் காங்கிரசுக்கு கிடையாது என்று ராகுல்காந்தி கூறினார்.

ஒவ்வொருவரின் தாய்மொழியும் முக்கியம் என்பதால், அனைத்து மொழிகளையும் காங்கிரஸ் கட்சி மதிப்பதாகவும், அதேபோல் அரசியலமைப்பில் அனைவருக்கும் உரிமை உள்ளது என்றும் ராகுல்காந்தி அப்போது தெரிவித்தார்.

இதனிடையே இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதால் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து ராகுல்காந்தியிடம் கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது

You might also like