அன்னையும் தந்தையும் கண்கண்ட தெய்வம்!

நினைவில் நிற்கும் வரிகள்:

அன்னையும் தந்தையும் தானே – பாரில்

அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்

தாயினும் கோவிலிங் கேது – ஈன்ற
தந்தைசொல் மிக்கதோர் மந்திர மேது
சேயின்கடன் அன்னை தொண்டு – புண்ய
தீர்த்தமும் மூர்த்தித் தலம்இதில் உண்டு

தாயுடன் தந்தையின் பாதம் – என்றும்
தலை வணங்காதவன் நாள் தவறாமல்
கோவிலில் சென்றென்ன காண்பான்? – நந்த
கோபாலன் வேண்டும் வரந்தருவானோ?

பொன்னுடல் தன்பொருள் பூமி – பெண்டு
புத்திரரும்புகழ் இத்தரை வாழ்வும்
அன்னைபிதா இன்றி ஏது? – மரம்
ஆயின் விதையின்றிக் காய்கனி ஏது?

1944-ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஹரிதாஸ்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் பாபநாசம் சிவன். இசை: ஜி. இராம நாதன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்

You might also like