ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: நவம்பர் 6-ம் தேதிக்கு மாற்றம்!

அக்டோபர் 2ம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்து. அதே நாளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்கப் பேரணிக்கு அனுமதி கோரியிருந்தது.

இந்த நிலையில், சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக் கூறி, தமிழக காவல்துறை பேரணி மற்றும் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்து விட்டது.

இதை எதிர்த்து, ஆர்எஸ்எஸ் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. அதேநேரம் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளிக்க பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளதால் சீராய்வு மனுவில் தமிழக காவல்துறை குறிப்பிட்டிருந்தது. அதோடு, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளித்த உத்தரவுக்கு தடைவிதிக்க கோரியும் காவல் துறை தரப்பில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அக்டோபர் 2ம் தேதி அன்று ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வாதம் செய்தது.

இந்நிலையில், தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதிக்கு பதில் நவம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், நவம்பர் 6ம் தேதி பேரணிக்கு அக்டோபர் 31ம் தேதிக்குள் காவல்துறை அனுமதி தராவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதனிடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அதன் ஆதரவுக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்றிணைந்து, ஏற்கனவே நடைபெறுவதாக இருந்த சமூக நல்லிணக்கப் பேரணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக காவல்துறை இயக்குநரிடம் மனு அளித்துள்ளனர்.

You might also like