நினைவில் நிற்கும் வரிகள் :
***
ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா?
எண்ணிப் பாருங்க… ஐயா எண்ணிப் பாருங்க…
நாச்சியப்பா சங்கிலிக் கருப்பா
பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா
மூட்டையடிச்சா உன்னையே விடுவானா?
நெனச்சுப் பாருங்க… நல்லா நெனச்சுப் பாருங்க…
தேட்டை போடும் புள்ளிகளெல்லாம்
கோட்டை விட்டுக் கம்பி எண்ணணும்
சிறையில் கம்பி எண்ணணும்
பூட்டை உடைக்கும் புலியே
இதை நீங்க புரிஞ்சு கொள்ளுங்க
காலமெல்லாம் வழிப்பறிக் கொள்ளை
கன்னம் போட்டுப் பிழைப்பதும் தொல்லை
கனவில் கூட வேண்டாமையா நல்லாக் கேளுங்க
ஊரை அடிச்சுப் பிழைக்கவும் வேண்டாம்
யாருக்கும் நீ பயப்பட வேண்டாம்
ஏரைப் பிடிச்சு மானம் பெரிதாய் வாழ வேணுங்க
நாமே வாழ வேணுங்க நாமே வாழ வேணுங்க
(ஏச்சுப் பிழைக்கும்)
– 1956-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த மதுரை வீரன் திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.