அமித்ஷா – எடப்பாடி சந்திப்பின் பின்னணி!

தமிழகத்தில் அடுத்தடுத்து அ.தி.மு.க சார்ந்த முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான வீடுகளிலும் அலுவலகங்களிலும் தொடர்ச்சியாக ஒருபுறம் ரெய்டுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அந்த ரெய்டுகளில் குறிப்பிட்ட தொகையில் ஒவ்வொரு துறையிலும் நகைகளும் வெள்ளிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல்களும் வந்துகொண்டிருக்கிறது.

அண்மையில் கடந்த வாரம் இரண்டு அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டுகள் நடந்த பிறகு, அந்த ரெய்டுக்கு  உள்ளான அமைச்சர்களின் பேச்சுகள் அரசுக்கு எதிராக கடுமையாக இருந்தது.

ரொம்ப நாள் அமைதியாக இருந்த ராஜேந்திர பாலாஜியும் தன்னுடைய பழக்கமான கொச்சையான பாணியில் விமர்சித்திருக்கிறார்.

எடப்பாடியும் பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு அவருடைய பேச்சின் தொணி ஆளுங்கட்சிக்கு எதிராக மாறியுள்ளது.

இந்தநிலையில், கடந்த வாரம் பாஜக தலைமையிலான கர்நாடக அரசு எடப்பாடி பழனிசாமி உறவினர் மீதும் டெண்டர் முறைகேடு வழக்கில் அவரை தொடர்புப்படுத்தி வழக்கைத் தொடர்ந்திருக்கிறது.

எடப்பாடிக்கு நெருக்கமான அமைச்சர்கள் வீடுகளில் நடந்த சோதனையைவிட இவர் உறவினரை தொடர்புப்படுத்தி பிஜேபி தலைமையிலான அரசே அந்தக் குற்றச்சாட்டை பதிவுசெய்திருப்பது முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

இதையொட்டி சமீபத்தில் டெல்லிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அந்தச் சந்திப்பில் பேசப்பட்டிருப்பது என்ன என்பது குறித்து சில விஷயங்கள் கசிந்திருக்கின்றன.

ஏறத்தாழ இருபது நிமிடங்கள் சந்தித்த நிகழ்வின்போது உறவினர் மீதான டெண்டர் முறைகேடு தொடர்பாக கர்நாடக அரசு தொடர்ந்திருக்கும் வழக்கிலிருந்து அவரை விடுவிப்பதற்கான ஒரு முயற்சியாகத்தான் அவருடைய டெல்லி சந்திப்பு அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

தன்னைச் சார்ந்திருக்கின்ற அமைச்சர்களில் வீடுகளில் ரெய்டு நடந்து வருவது பற்றியும் முறையீட்டுக்கிறார். ஆனால், இந்த முறையீட்டுக்கு அமித்ஷா எந்தவிதமான பதிலும் சொல்லப்படவில்லை எனத் தெரிகிறது.

அதோடு பிரதமரை பார்ப்பதற்கான பலமுறை முயற்சி செய்தாலும் அனுமதிக் கிடைக்கவில்லை.

ஆனால் தன்னைச் சார்ந்தவர்களையும் தன் உறவினர்களையும் காப்பாற்றும் இந்த முயற்சியைத்தான் இந்த டெல்லி சந்திப்பு நடந்திருக்கிறது என்பதை பாஜக கட்சி வட்டாரங்கள் கசிய விட்டிருக்கின்றன.

தமிழக அரசு போட்ட வழக்குகளைப் பொறுத்த வரை அவர்கள் செய்திருக்கிற சோதனைகளைவிட கர்நாடகத்தில் இருக்கிற பாஜக அரசு, எடப்பாடி உறவினருக்கு போட்டிருக்க வழக்குதான் எடப்பாடியை மிகவும் பதற்றமடைய வைத்திருக்கிறது.

You might also like