தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!

தமிழனுக்கு நிரந்தர முகவரியும் அழியாத மகுடமாகவும் அமைந்த பாடல்!

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!

இந்த பாடல் வரிகளை எழுதியவர் நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை என்கிற மாபெரும் கவிஞர்.

1888-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் மோகனூர் எனும் சிறிய கிராமத்தில் பிறந்த சித்திர கவிஞர். தமிழக அரசின் முதல் அரசவை கவிஞர். தமிழக சட்ட மேலவையில் இரண்டு முறை உறுப்பினராக இருந்தவர். மத்திய அரசின் பத்ம பூஷன் விருது பெற்றவர்.

மக்கல் கவிஞர் ஒரு எழுத்தாளர், தேசபக்தர், சமுதாய சீர்திருத்த வாதி, நாடகாசிரியர், நாவலாசிரியர், பத்திரிகை ஆசிரியர், என பன்முகம் கொண்டவர்.

அவர் எழுதிய நூல்கள் பதினான்கு. கவிதைத்தொகுப்பு பத்து. தன்வரலாறு மூன்று, நாவல்கள் ஐந்து சிறு காப்பியம் ஐந்து.

அவர் எழுதிய புகழ்பெற்ற நாவல் மலைக்கள்ளன்! வேலூர் மத்திய சிறையில் சுதந்திர போராட்டத்தின் போது ஓராண்டு சிறைவாசம் பெற்றபோது எழுதிய நாவல்தான் மலைக்கள்ளன்!

மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அது.

தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவருக்கோர் குணமுண்டு
அமிழ்தம் அவனுடை மொழியாகும்
அன்பே அவனுடைய வழியாகும்!

மானம் பெரிதென உயிர் விடுவான்
மற்றவருக்காக துயர் படுவான்
தானம் வாங்கிடக் கூசிடுவான்
தருவது மேல் எனப் பேசிடுவான்!

தமிழரான நமக்குத்தான் இத்தனை அடைமொழிகள் கொடுத்திருக்கிறார்.

இன்றைக்கும் தமிழனை தலை நிமிர வைத்து அழகு பார்க்கும் அற்புதப் பாடல் வரிகள் இவை. 

அவரது நினைவு தினமான இன்று அவரை நினைவு கூறும் விதமாக மலைக் கள்ளன் படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகள்…

தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனது மொழியாகும்
அன்றே அவனது வழியாகும்

கலைகள் யாவிலும் வல்லவனாம்
கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
நிலை பொருள் பற்பல அடையாளம்
நின்றன இன்னும் உடையோனாம்

(தமிழன்)

மானம் பெரிதென உயிர் விடுவான்
மற்றவருக்காக துயர் படுவான்

தானம் வாங்கிட கூசிடுவான்
தருவது மேலென பேசிடுவான்

(தமிழன்)

யாசிகள் தொழுதல் உண்டெனினும்
சமரசம் நாட்டினில் கண்டவனாம்

நீதியும் உரிமையும் அந்நியர்க்கும்
நிறை குறையாமல் பண்ணினவன்

(தமிழன்)

– 1954-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த ‘மலைக்கள்ளன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் ராமலிங்கம் பிள்ளை. இசை சுப்பையா நாயுடு. பாடியவர் டி.எம்.சௌந்திரராஜன்

You might also like