தேர்தல் வாக்குறுதிகள் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும்!

அஸ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

தோ்தல்களின்போது வாக்காளா்களைக் கவர அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவசங்கள் தொடா்பான வாக்குறுதிகளுக்கு எதிராக அஸ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “தோ்தலில் வெற்றிபெற்ற பின்னா் சில இலவசங்களை அளிப்பதாக வாக்குறுதிகள் தரும் கட்சிகளின் சின்னத்தை முடக்கவும், அக்கட்சிகளின் பதிவை ரத்து செய்யவும் தோ்தல் ஆணையம் தனது அதிகாரத்தை பயன்படுத்த உத்தரவிட வேண்டும்.

பொது நிதியில் இருந்து இலவசங்கள் விநியோகிக்கப்படுகிறது. அது நாட்டின் நிதி நிலையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மக்கள் நலனுக்காக திட்டங்கள் அறிவிப்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் அதேவேளையில், தோ்தல் அறிக்கையில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் வாக்குறுதிகள் ஏற்படுத்தும் தாக்கம், அவற்றுக்கான நிதி குறித்து தோ்தல் ஆணையத்திடம் தெரியப்படுத்த வேண்டியது அவசியம்.

தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் குறித்த விவரங்களை தோ்தல் ஆணையத்தால் வழங்கப்படும் விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதுதொடா்பாக விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ள தோ்தல் ஆணையத்துக்கும் உத்தரவிடப்பட்டது. இதேபோன்ற உத்தரவை இலவசங்கள் தொடா்பான தற்போதைய வழக்கிலும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஆகஸ்ட் 22-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

You might also like