இன்றைய மக்களின் டாப்-10 கவலைகள்!

எழுத்தாளர் சுஜாதா

“ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலைபேசவும் ஆசைப்பட்டேன்.

நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படியாகத் திருத்தப்பட்டு, எளிமையாக்கப்பட்டு, எழுபது வயதில் காலை எழுந்தவுடன் சுகமாய் பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகின்றேன்.

வாழ்க்கை இவ்வகையில் ப்ரொக்ரஸீவ் காம்ப்ரமைஸ் (படிப்படியான சமரசங்களால் ஆனது) இன்றைய தினத்தில் என் டாப் டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால், முதலிடத்தில் உடல்நலம், மனநலம், மற்றவருக்கு தொந்தரவு தராமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது எழுதுவது.. இந்தப் பட்டியலில் பணம் இல்லை”.

– சுஜாதாவின் கற்றதும் பெற்றதும்  நூலிலிருந்து….

You might also like