பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரணியம் பாரதியின் பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.
‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் “நல்லதோர் வீணை செய்தே”, “தீர்த்தக் கரையினிலே” – பாடல்களை எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் பாடியிருப்பார்.
இருந்தாலும், எஸ்.பி.பி பாடிய பாரதி பாடல்களில் முக்கியமானது ‘ஏழாவது மனிதன்’ படத்தில் இடம்பெற்ற “அச்சமில்லை.. அச்சமில்லை”
பிரபல வயலின் கலைஞர் எல்.சுப்பிரமணியத்தின் இசையில் அவ்வளவு வேகத்துடன் அமைந்திருக்கும் அந்தப் பாடல்.
அனாயசமாகச் சிரித்தபடி உச்ச ஸ்தாயியில் பாடியிருப்பார் எஸ்.பி.பி.
தடதடத்த இசையும், வேகம் கொண்ட வரிகளும், பாடிய விதமும் அந்தப் பாடலைக் கேட்கும்போது, உத்வேகத்தைக் கொடுத்ததால், வானொலியில் கூட அந்தப் பாடல் ஒளிபரப்பப்படவில்லை என்று சொல்கிற அளவுக்குப் பேச்சிருந்தது.
உயிரோட்டமான அந்தப் பாடல் கீழே:
***
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே…
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே…
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே…
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே …
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே…
நச்சைவாயிலே கொணர்ந்து நண்பரூட்டும் போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே…
பச்சையூனியைந்த வேற்படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே…
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே…
– 1982-ல் ரகுவரன் நடித்து வெளிவந்த ‘ஏழாவது மனிதன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை எழுதியவர் மகாகவி பாரதியார்.
–
https://www.youtube.com/watch?v=yjeiVngeuCo…