– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
ஈரோட்டில் நடைபெறும் புத்தகத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், ”அனைத்து மாவட்டங்களிலும் அரசின் உதவியோடு புத்தகக் கண்காட்சி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்காக இந்த ஆண்டு, 4 கோடியே 96 இலட்சம் ரூபாய் நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புத்தகம் பரிசளிப்பது இன்றைக்கு ஒரு இயக்கமாகவே மாறி இருக்கிறது. இந்த இயக்கம் இன்னும் விரிவடைய வேண்டும், வலுவடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.
அறியாமை எனும் இருட்டில் தத்தளிப்பவர்களுக்கு ஒளி கொடுக்கும் அறிவுச் சுடர்தான் புத்தகங்கள்.
வீட்டுக்கு ஒரு நூலகம் அமைய வேண்டும் என்று அண்ணா விரும்பியதை சுட்டிக்காட்டிய அவர், அப்படி அனைவரும் தங்கள் வீட்டில் சிறு நூலகமாவது அமைத்திருக்க வேண்டும்.
ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது புத்தகங்களைப் பரிமாறிக்கொள்ளும் பண்பாடு வளர வேண்டும்.
வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அறிவார்ந்த நூல்களை நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். சிந்தனையில் தெளிவு ஏற்படுத்தும் புத்தகங்களை இன்றே வாசிக்கத் தொடங்குங்கள்” என்று வலியுறுத்தினார்.