பொன்னியின் செல்வன், கோப்ரா படங்களில் நடித்துள்ள விக்ரம், பொன்னியின் செல்வன் படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் தனக்கு வாய்ப்புகள் குறைவு என்று நினைக்கிறார்.
எனவே, கோப்ரா படத்தை மலைபோல் நம்பியிருக்கிறார். அதில் பத்துக்கும் அதிகமான கெட்டப்பில் அவர் நடித்துள்ளாராம்.
ஆனால், கோப்ரா படம் முடிந்தபாடில்லை. படப்பிடிப்பு மூன்று மாதத்திற்கு முன்பே முடிந்து விட்டதாகச் சொல்லப்பட்டது.
இயக்குநர் அஜய் ஞானமுத்து எடிட்டிங் வேலைகளை ஜரூராக முடிக்காமல் ஜவ்வாக இழுக்கிறாராம்.
ஒரு கட்டத்திற்கு மேல் கோபமான விக்ரம் டப்பிங் வேலைகளைக்கூட முடிக்காமல் வெளிநாட்டுக்குப் பறந்துவிட்டார்.
பிறகு சமரச பேச்சுவார்த்தை நடத்தி, மற்ற பணிகளை முடித்துக்கொடுத்துள்ளார் விக்ரம்.
ஒருவழியாக ஆகஸ்ட் 11ஆம் தேதி கோப்ரா படத்தை வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
இப்போதும்கூட விஎப்எக்ஸ் வேலைகள் இருப்பதாகச் சொல்கிறாராம் இயக்குநர். இதனால் அறிவித்த தேதியில் கோப்ரா படத்தை ரிலீஸ் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த தயாரிப்பாளர் இயக்குநரை ரெட் ஜெயன்ட் மூவிஸ் பக்கம் அழைத்துச் சென்றுள்ளார்.
கோப்ரா படத்தின் தமிழ்நாட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.
இயக்குனரிடம் உதயநிதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
கடைசியாக ஆகஸ்ட் 20-க்குள் படத்தை முடித்துத் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளாரம் இயக்குநர்.
எனவே படம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.